ஆரோக்கியம்

இயற்கை பல்பொடி செய்வது எப்படி ?

How to make natural toothpaste?

உபயோகித்த எலுமிச்சை தோலை தினமும் வெட்டி காய விடுங்கள். கழுவிய ஆரஞ்சு தோலையும் வெட்டி காய விடுங்கள். ஆலம் விழுது கிடைத்தால் அதனையும் காய விடுங்கள். வேப்பிலைகளையும் காய விடுங்கள். துளசி இருந்தால் அதனையும் காய விடுங்கள். காய்ந்ததை அன்றன்று பார்த்து எடுத்து சேமியுங்கள். பின்னர் ஒன்றாக சேர்த்து அரைத்து மெல்லிய சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கசக்கும். ஆனால் சுவைக்கு நாக்கு பழக்கப்பட்டு விடும். எந்த ஆரோக்கிய கேடுகளும் வராது.

இதனோடு அடிக்கடி தூளாக்கிய கல் உப்பு கொண்டு துலக்கினால் பல் பளிச்சென்று ஆகும். சிறியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக்குங்கள். என்றும் பல் தூரிகை தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரிகையை தெரிவு செய்யுங்கள். அழுத்தி பல்லை விளக்க வேண்டாம். நீண்ட நேரம் பல்லை விளக்கவும் வேண்டாம்.

இதனால் முரசு கரைந்து பல் கூச்சம், பல் ஆடுதல் போன்றவை வர பார்க்கும். குளிரான, சூடான உணவுகளை உண்ணாதீர்கள். பழங்கள் பச்சைகாய்கறிகளை அடிக்கடி மெல்லுங்கள். கடையில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் சகல தீங்கான உணவுகளை உண்ணாதீர்கள். பற்பசையை பாவிக்காது விட்டாலேயே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button