தாய்ப்பால்தாய்மை

இரண்டு மார்பில் ஊறும் இரு பால்கள்; தாய்மார்கள் தெரிந்து கொள்ளுங்கள்

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு தாய் கொடுக்கும் வரம் போன்றது. அத்தனை நன்மையுள்ள சத்துக்கள் அதில் அடங்கியுள்ளது. தாய்ப்பால் குறித்து பல பெண்களுக்கு தெரியாமல் இருப்பதே தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கு காரணம் என்று கூட சொல்லலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பலரும் பெரும்பாலும் ஒரு பக்கத்தில் உள்ள மார்பையே பயன்படுத்துவார்கள். அப்படி இல்லாது இரு மார்பகங்களிலும் குழந்தைக்கு மாறி மாறி பால் கொடுக்க வேண்டும். இதில்தான் குழந்தையின் முழு ஆரோக்கியமும் உள்ளது. முதலில் குழந்தை பிறந்த ஒரு வார காலத்திற்கு தேவைக்கு ஏற்ப அல்லது ஒரு நாளைக்கு எட்டு முறை அல்லது தேவைக்கு ஏற்ப 2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலூட்ட வேண்டும்.

முக்கியமாக ஒவ்வொரு தடவை பாலூட்டும் போதும் இரு வகையான பால் சுரக்கிறது. தாகம் தீர்க்கும் பால் மற்றும் கொழுப்பு நிறைந்த பால். இரண்டுமே குழந்தைக்குத் தேவை. எனவே, ஒரு முறை பாலூட்டும் போது குழந்தை ஒரு மார்பில் உள்ள பாலை அருந்தி விட்டால் அடுத்த முறை இரண்டாவது மார்பில் பாலூட்டவும். உங்கள் குழந்தைக்கு வசதியாகவும் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும் வரை நீங்கள் சரியாகவே செய்கிறீர்கள் என்று பொருள். ஆதலால் தாய்மார்கள் தங்களது இரு மார்பிலும் குழந்தைக்கு மாறி மாறி தாய்ப்பால் ஊட்ட வேண்டும்.

தாய்பால் கொடுக்கும் முறை குறிப்புகள்

  1. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரப்பட வேண்டும்.
  2. சிசேரியன் பிரசவம் என்றால், பிறந்த 4 மணி நேரத்துக்குள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்.
  3. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
  4. 6 மாதத்துக்குப் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து தர வேண்டும்.
  5. 2 வருடம் தாய்ப்பால் தருவது குழந்தைக்கு மிகவும் நல்லது.
  6. தாய்ப்பால் அளிக்கும் தாய், தினமும் குளித்து சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.
  7. தாய்ப்பால் கொடுப்பதற்காக விசேஷமான உணவுகள் எதுவும் தேவையில்லை.
  8. தாய்க்கு தினமும் சுமார் 500 கலோரிகள் மற்றும் 15 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை, அவ்வளவுதான்.
  9. 2 டம்பர் பால், ஒரு முட்டை, ஒரு கரண்டி பச்சைக் காய்கறிகள் போதும்.
  10. தாய்க்கும் சேய்க்கும் உடல் நலம் பாதித்தாலும் தாய்ப்பால் தர வேண்டும். எந்த நோய்க்கும் பயந்து தாய்ப்பாலை நிறுத்தத் தேவையில்லை.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button