ஆங்கில மருத்துவம்பாலியல்

இருபாலர் கருத்தடை முறைகள் ஓர் பார்வை

pregnant Contraception method

தற்காலிக முறைகள்

பெண்குறி குல்லாய்:

இது நடுவிலே உட்குழியாக உள்ள இரப்பிரினால் ஆன சாதனம். இதை உடலுறவுக்கு முன்பு அந்த பெண்ணே நுழைத்துக் கொள்ளலாம். இது கருப்பைக் கழுத்தை மூடிக் கொண்டு விந்தணுக்கள் கருப்பையில் நுழையாதவாறு தடுக்கிறது. இதை எவ்வாறு பொருத்திக் கொள்வது என்று மருத்துவமனையில் மருத்துவர் அல்லது செவிலியரின் ஆலோசனை பெற வேண்டும்.

நன்மைகள்

1. ஓரளவுக்கு நம்பத் தகுந்த முறை மற்றும் பால்வினை நோய்களை பாதுகாக்கும்.

2. கருப்பை புற்றுநோயை தடுத்து வராமல் பாதுகாக்கவும் கூடியது.

தீமைகள் : சிறுநீர் நோய்த் தொற்று 5 – 20% அதிகமாக இருக்கும்.

பெண்கள் பயன்படுத்தும் உறை.

இது பெண்களுக்கென்றே உள்ள உறையாகும். இவை பாலியூரேத்தேர் ஷத் 7-8 செ.மீ விட்டமும் மற்றும் 17 செ.மீ. நீளமுடையது. இதில் 2 பாலியூரேத்கேன் வளையங்கள் காணப்படுகின்றன. ஒரு வளையம் மிக நெருக்கமாகவும் இன்னொரு வளையம் இன்னொரு நிலையில் பொருத்தப்பட்டிருக்கும். ஆண் பெண் சேர்க்கைக்கு முன் சிசுத்தாரைப் பகுதியில், வெளிப்புறதுளையில் பொருத்த வேண்டும்.

நன்மைகள்:

1. HIV கிருமி நுழையாமல் பாதுகாக்கும்.

2. பால்வினை நோய்களை தடுத்து பாதுகாக்கும்.

3. எளிதாக பயன்படுத்தலாம், ஆதலால் உடலுக்கு எதுவும் ஆபத்து இல்லை .

தீமைகள்

1. அதிக விலையுயர்ந்தது.

2. வெளி உதடுகள் உள் உதடுகளின் வெளியே அதிகம் தெரியும்.

3. ஒவ்வொரு சேர்க்கைக்கு பின் ஒரு புதிய உறையைப் பயன்படுத்த வேண்டும்.

IUCD லூப் : Intra Uterine Contraceptive Device இது மிக சிறந்ததும், நவீனமானதுமான ஒரு கருத்தடைச் சாதனம். முக்கியமாக காப்பர் TCUT 200, CUT 380 A, மல்டிலோட் 250, மல்டிலோட் 375, புரோஜஸ்டார்ட் மற்றும் லியோனார்ஜெஸ்ட்ரால்.

காப்பர்-டி – போடும் காலம் :

உள் நுழைக்கும் நிலை கருச்சிதைவு அ) பிரசவத்திற்கு பின் ஆறு வாரங்களுக்குப் பிறகு மாதவிடாய் முடிந்த பிறகு 2 – 3 நாட்களுக்கு மேல் 5 நாட்களுக்குள் பொருத்தலாம்.

கருச்சிதைவுப்பின் :

பிரசவத்திற்கு பிறகு நஞ்சுக்கொடி வெளிவந்த பிறகும் போடலாம்.

நன்மைகள்

1. பாதுகாப்பான மிகவும் சிறந்த கருத்தடைச் சாதனம், போடும் நிலைகள் எளிதானது.

2. வலியுடன் கூடிய உதிரப் போக்கு மற்றும் மௌரோஜியா குறையலாம்.

தீமைகள்

1. பால்வினை நோய்களை தடுக்க முடியாது.

2. கருப்பிைல் மாற்றங்கள் (அ) அசாதாரணங்கள் நிகழலாம். 3. கர்ப்ப நோய்த் தொற்று இருக்கும்போது பயன்படுத்தக் கூடாது.

ஆண் உறை

ஓரளவுக்கு நம்பத்தகுந்த ஒரு கருத்தடைச் சாதனம் சேர்க்கைக்குச் சற்று முன்னால் இது ஆண் உறுப்புக்குப் போடப்படும். ஒரு வகை உறையாகும். பயன்படுத்தப் படுவதற்கு முன்னால் இது ஊதப்பட்டு பரிசோதிக்கப்படவேண்டும். பின்னால் அகற்றப் படும் போதும் கூட எச்சரிக்கையாக அகற்றப்படவேண்டும் ஏனெனில் இதனுள் விந்துத் திரவம் இருக்கும்.

நன்மைகள்

1) பால்வினை நோய்களை தடுக்க கூடியது.

2) ஒவ்வாமை நிலையை தடுக்கக் கூடியதும் மற்றும் விந்தணு எதிர்ப்புத் திறன் உருவாக்குகிறது.

3) அதிக விலையில்லை மற்றும் எளிதாக கிடைக்கக் கூடியது. 4) எந்தக் குறைபாடுகளும் இல்லை .

தீமைகள்

1. லேடக்ஸ் (இரப்பர்) ஒவ்வாமை

2. உறை கிழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்படும். விந்துத் திரவம் நுழையக் கூடிய வாய்ப்பு இருக்கும்.

3. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

4. ஒவ்வொரு முறையும் புதிய ஆணுறை அணிய வேண்டும்.

வேதியியல் கருத்தடைச் சாதனங்கள்:

இவை விந்தணுக்களை செயலிழக்கச் செய்கிறது. இதற்கான வேதிப் பொருட்கள் நானோ பிராக்ஸினால் மற்றும் ஆக்டாச்சினால், பால் வினை வியாதிகளை தடுக்கக் கூடியது.

நுரை மாத்திரைகள்:

பெண்களே பயன்படுத்தும் எளிய முறை உடல் உறவுக்கு முன்பு 1 மணி நேரத்திற்கு முன் கருப்பாதையில் வைத்து விட வேண்டும்.

பசைகள் மற்றும் கூடுகள் :

எளிய முறையில் பயன்படுத்தப் படக் கூடியவைகளே, சிசுத்தாரையில் நுழைத்து பூசவும் (அ) ஆண் மற்றும் பெண் உறை அணிவதற்குப் பின் போடவும்

சப்போசிட்டரிகள்: இதுவும் கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தக் கூடியது. நுழைப்பதற்கு 10-15 நிமிடத்திற்கு முன் பயன்படுத்துதல் இவை இருவருக்கும் எரிச்சலைத் தரும்.

ஸ்பான்ஸ் :

பயன்படுத்துவதற்கு முன் இவற்றை பிழிந்தும், ஈரத்தன்மை நிலையில் தேவைப்படுகிறது. சிசுத்தாரையின் பின்புறத்தில் உள்ள துளையில் பொருத்தவேண்டும். கருப்பை வாயில் விந்து நுழைவதைத் தடுக்கிறது.

நன்மைகள்

1. எளிதாக பயன்படுத்தக்கூடியது. பால்வினை வியாதிகளை தடுக்கிறது.

2. கருப்பை புற்றுநோயை எதிர்த்து பாதுகாக்கிறது.

தீமைகள்

1. எரிச்சல், அலர்ஜி அல்லது ஒவ்வாமை ஏற்படும்.

2. அதிக பாதிப்பு 10 – 25/100 பெண்கள் வருடம்.

3. ஒவ்வொரு முறையும் புதியதாக அணிய வேண்டும்.

ஹார்மோனல் முறைகள்

வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் 28 நாட்களில் அடங்கும் நிலையில் 21 மாத்திரைகள் உட்கொள்ளப்படும் மருந்தின் செயல் இயக்கங்கள் 7 அயன் (அ) விட்டமின் மாத்திரைகள், பிளாசென்டா மாத்திரைகள் 21 மாத்திரைகளில் இருப்பதில்லை. இவை 7வது நாட்களிலிருந்து 21 நாட்கள் முடிவடையும் போது பயன்படுத்த வேண்டும். 0.1% பயன்படுத்துவது இல்லை , 2.3% பயன்படுத்த வேண்டும்.

இதர காரணிகள்:

ஈஸ்ட்ரோஜன் மற்றும் அதிகப்படியான புரோஜெஸ்ட்ரான் குறைபாடுகள், மயக்கம், வாந்தி, வீக்கம், தலைவலி, எரிச்சல், கால்களின் பிடிப்பு, குமட்டல், கண் பார்வை பாதிப்பு, மற்றும் கூடுதல் எடை. அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ட்ரோன் சுரப்பு தொட்டால் மார்பகத்தில் வலி, தலைவலி, இரத்தக் கொதிப்பு மற்றும் இருதயப் பாதித்தல்.

நன்மைகள்:

(வாய்வழி கருத்தடை மாத்திரைகள்)

1. கருவுறுதலைத் தடுக்கக் கூடியது.

2. ஒழுங்கான நிலையில் மாதவிடாய் சுழற்று ஏற்படும். மற்றும் நடுத்தர நிலையில் இரத்தம் வெளியேறும்.

3. கூபகக் இன்பில மெட்ரி தொற்று நோய்களை குறைக்கக் கூடியது மற்றும் முட்டைப்பையின் நியோபிளாசம், மற்றும் மார்பகப் புற்றுநோய், பெல்லோபியன் குழாயின் கருத்தரிக்கும் நிலை

4. ஆண் பெண் சேர்க்கையைத் தவிர்க்க கூடிய நிலையில்லை.

தீமைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்

1. பெண்கள் கருத்தடை மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. நிறைய எதிர் விளைவுகள் ஏற்படும் (மாத விடாய்க்கு பின்) 3. மருந்துகளின் வீரியம் கறையும் போது, சில மருந்துகள் ஆன்டி காசநோய் தெரபி மற்றும் ஆன்டி வலிப்பு நிலை

4. இந்நிலை பாலூட்டும் தாய்க்கு பயன்படுத்துவது இல்லை பால் சுரப்பு குறையும்.

5. பால்வினை நோய்களை தடுக்காது.

எதிர்குறிப்புகள்

திராம்போ பிலிபைட்டிஸ் மற்றும் திராம்பஸ்

எம்போலிசம் வரலாறு இருக்கும்.  கொரோனரி ஆர்ட்டிரி நோய்.

மார்பக புற்றுநோய் சந்தேகிக்கக் கூடிய நிலையில் நியோபிளேசியா ஈஸ்ட்ரோஜன் சுரப்பிகள்,

கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

கல்லீரல் சுழற்சி.

பித்தப்பையில் கல் காணப்படுதல்.

சிசுத்தாரையில் இரத்த ஒழுக்கு இருப்பதை கண்டறிய முடியும்.

அதிக இரத்த அழுத்தம்.

நீரிழிவு நோய்.

ஒற்றைத் தலைவலி.

பித்தப்பை நோய்கள்.

சிக்கிள் செல் நோய்.

அவசர கருத்தடை சாதனம்

பலவிதமான கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்தும்போது பல வித ஹார்மோன்களின் செயல் நிலைகள் இருக்கும். விந்தணுக்களின் பயணத்தை மற்றும் கருவுறுதல் நிகழ்வை குறைக்கும் (மார்னிங் ஆப்டர் மாத்திரைகள் கருத்தடை சாதனங்களை ஆண், பெண் சேர்க்கைக்கு முன் பயன்படுத்தவில்லை என்றால் சில சமயங்களில் சருத்தரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். மேலும் கருத்தடை சாதனங்கள் கிழிந்துவிடும், திரவம் வெளிப்படும், கருத்தரிக்கக்கூடிய நிலை இருக்கும்.

குறிப்புகள்

1. கருத்தடை சாதனங்களை உடலுறவின் போது தவிர்த்தல்

2. பாலினத் தாக்கம்

3. கழிந்துவிடக்கூடிய (அ) வெளியேற்றக்கூடிய நிரோத்

4. வாய்வழி மாத்திரைகளை மருந்துகளை உட்கொள்ள மறந்து விடும்போது

5. IUCD வெளியேற்றம் .

நன்மைகள்

கருத்தரிக்கும் முன்பே வெளியே எடுத்துவிடும் முறையும் 72 மணி நேரத்திற்குள் கர்ப்பம் தரிக்கும் நிலையை 98% தடுக்கவும் முடியும்.

தீமைகள்

குழுட்டல் மற்றும் வாந்தி, ஒழுங்கீனமான சிசுத்தாரை இரத்த ஒழுங்கு ஏற்படும்.

முன்னெச்சரிக்கைகள்

திராம்போ எப்போலிக் எபிசோடு வரலாறு உள்ள பெண்கள் (அ) சந்தேகிக்ககூடிய கர்ப்பிணிகள் மற்றும் பெண்கள் வாய்வழி உண்ணும் மாத்திரைகளை காலை வேளையில் பயன்படுத்தக்கூடாது.

ஊசிமூலம் கருத்தடை

கருவுறுதல் நிலை ஏற்படும் போது புரோஜெஸ்டின் அடங்கிய ஊசி பிளாக்ஸ் மிட்சைக்கிள் LH மற்றும் கருமுட்டை உருவாதலை தடுக்கிறது.

தயாரிப்புகள்

1. DMPA மெட்ராக்ஸி புரோஜ்ட்ரோன் அசிட்டேட் (அ) டிப்போ புரோகிரா 150 மி.கி. 17/3 மாதங்கள் (1 வீதம்) நார் எதிள்ட்ரோன் 200 மி.கி. 14 (1வீதம் 2 மாதங்கள்)

நன்மைகள்

1. மிகவும் நம்பத்தகுந்த நீண்ட நாட்கள் வேலை செய்யும், 24 மணி நேரத்தில் பாலினத்தொடர்பு வைத்துக் கொள்ள பயப்படத் தேவையில்லை. பெண்களுக்கு முக்கியமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது பரிந்துரை செய்யப்படுகிறது

2. திராமபோ எம்போலிசம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கங்கள் இருக்கும் பெண்களுக்கு வரலாறு கேட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

3. புற்றுநோய் மற்றும் எண்டோமெட்ரியத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. குறைந்த அளவுள்ள, அதிக பாதிப்பில்லாத நிலை ஏற்படும்

தீமைகள்

1. கருத்தரிக்கும் காலம் தற்காலிகமாக 6 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும்.

2. ஒழுங்கீனமான இரத்த ஒழுக்கு.

3. அமினோரியா (மாதவிடாய் நின்று போதல்)

4. அதிகப்படியான இரத்த ஒழுக்கு

5. பால்வினை நோய்கள் பாதுகாப்பு குறைவு.

6. அதிக உடல் எடை

தவிர்க்கப்படவேண்டியவைகள்

1. சந்தேகிக்கக்கூடிய (அ) அரியக்கூடிய கர்ப்பிணிகள்

2. அசாதாரணமான சிசுத்தாரை இரத்த ஒழுங்கு

3. கல்லீரல் நோய்கள்

4. சந்தேகிக்கக்கூடிய கருப்பைவாய் புற்றுநோய்.

எதிர்விளைவுகள்

1. ஒழுங்கீனமான இரத்த ஒழுக்கு

2. எடை அதிகரிப்பு

3. மலட்டுத்தன்மை

4. தலைவலி, குமட்டல், மயக்கம் மற்றும் மார்பகத்தில் தொட்டால் வலி

5. குறைந்த லிபிடோ, சோர்வு, நரம்புதளர்ச்சி

6. முடி கொட்டுதல்.

7. பருக்கள்

நிரந்தர முறைகள்

பெண்களுக்கு கருத்தடை முறைகள்:

இரண்டு பெல்லோப்பியன் குழாய்களை துண்டித்தல் ஒரு நிரந்தர முறையாகும்.

குறிப்புகள்

1. இரண்டு பேரும் ஆண், பெண் தம்பதியர் நிரந்தர முறையை செய்ய தீர்மானித்தல்

2. பாதிப்பு இல்லாத, மற்றும் உடல் நலத்திற்கு உகந்ததுமான ஒரு வாழ்க்கை வாழ்வது மருத்துவ வழிமுறையாகும்.

3. அதிக பாதிப்புள்ள பரம்பரை நோய் பெண்களுக்கு ஏற்படுவது, குழந்தை உருவாதலை தவிர்க்கலாம்.

எதிர்குறிப்புகள்

மிகவும் பொருத்தமான.

1. பெரினியல் நோய் தொற்று.

2. இதய மற்றும் நுரையீரல் சம்பந்தமான (அ) மெட்டபாலிக் மாற்றங்கள்.

3. தாயின் ஒப்புதல் இல்லாத நிலை

குறைந்த பொருத்தமான எதிர்குறிப்புகள்

1. உடல் பருமன்.

2. மருத்துவ அ) அறுவை சிகிச்சை முறையில் அதிக பாதிப்புள்ள இரத்த சோகைஏற்படும்.

3. கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய்.

தீமைகள்

1. இது ஒரு நிரந்தர முறை, எளிய முறையில் செய்ய இயலாது.

2. பால்வினை நோய்களை தடுக்க முடியாது.

3. அறுவை சிகிச்சை முறையில் சிறிய அளவு பாதிப்புகள் இருக்கும்.

ஆண்களுக்கு கருத்தடை முறைகள் () வாசக்டமி.

ஆண் கருவிற்கு செய்யப்படுகிற அறுவை சிகிச்சை, இரு பக்கத்திலுள்ள விந்துக்கொடி அறுக்கப்பட்டு விந்தணுக்கள் செல்லுதல் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.

நன்மைகள்

1. இது ஒரு எளிய செயல் முறை ஒரு பகுதியை மட்டும் உணர்வறச் செய்யும் முறையாகும்.

2. இதற்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை.

3. நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்வினை விளைவுகள் ஏற்படலாம்.

4. பாலின சேர்க்கையை தடுத்தல் (அச்சமயத்தில் மட்டும்).

5. மிகவும் குறைந்த செலவு.

6. அறுவை சிகிச்சை திரும்பவும் செய்யலாம்.

7. தோல்வியின் சதவீதம் 3-4%.

தீமைகள்

1. இது ஒரு நிரந்தர முறை

2. இவை பால்வினை நோய்களை தடுப்பதில்லை

3. உடனடியாக கருத்தரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். சிறிது காலங்களுக்கு பிறகே

4. அறுவை சிகிச்சை முறை பாதிப்புகள் இல்லை

5 சில ஆண்களுக்கு மனரீதியாக உடல் விளைவுகள் ஏற்படும்.

கர்ப்பத்தடை ஆப்ரேஷன்

இந்த ஆப்ரேஷனில், ஒரு பெண் கருத்தரிப்பது தடை செய்யப்படுகிறது. இது மிகவும் எஃபெக்டிவ்வான முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்கிறார்கள். கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்துவிடுங்கள். உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து நீங்கள் பேசுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். இனிமேல் குழந்தை வேண்டவே வேண்டாமென்று முடிவெடுத்தவர்களுக்கு இந்த முறை சரி. எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு கருத்தடை சாதனம் (ஐயுடி), கருத்தடை மாத்திரை போன்றவைதான் சரியான வழி!

பெண் கருத்தடை ஆப்ரேஷன் என்றால் என்ன?

கருக்குழாயை கட் செய்து அதன் முனையை தையலால் முடிபோட்டுவிடுவது. இந்த ஃபேமிலி பிளானிங் முறைதான் பாதுகாப்பான, பர்மனெண்ட்டான பெண்களுக்கான கருத்தடை ஆப்ரேஷன்.

இந்த கருக்குழாய் (ஃபேல்லோபியன் டியூப்) கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் உருவாகியிருக்கும். கரு முட்டையும், விந்தணுவும் இந்த கருக்குழாயின் வழியாக உள்ளே சேர்ந்து கருத்தரிக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு கருக்குழாய்களும் இந்த ஆப்ரேஷனினால் அடைபட்டுவிட்டால், கருமுட்டையால் இந்த குழாயினுள் நுழைய முடியாது. விந்தணுவினாலும் கருமுட்டையைச் சென்றடைய முடியாது. நிறைய பெண்கள் இப்படி சேர்ந்து வரும் கருமுட்டைகளால் தாங்கள் குண்டாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மூட நம்பிக்கைதான். இதில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், கருமுட்டை மிகமிக நுண்ணியமானது. தவிர இது 48 மணி நேரத்தில் சிதைந்து போய்விடும்.

இந்த சர்ஜரியினால் உங்களுடைய வாழ்க்கைத் துணைவரின் தாம்பத்ய சுகம் குறையாது. இந்த சர்ஜரிக்குப் பிறகு கருத்தரித்து விடுவோமோ என்ற பயமில்லாமல் தாம்பத்யத்தில் ஈடுபட முடிவதால், தங்களுடைய தாம்பத்ய சுகம் அதிகரித்திருப்பதாக நிறைய தம்பதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போது இந்த கருத்தடை ஆப்ரேஷனைச் செய்யலாம்?

  • பொதுவாக நார்மல் டெலிவரி மூலம் குழந்தை பிறந்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 1-2 நாட்களில் இந்த ஆப்ரேஷன் செய்யப்படும். இந்த ஆப்ரேஷனைச் செய்வதற்கு முன்னால், பிறந்துள்ள குழந்தையின் ஹெல்த்தை, குழந்தை நல நிபுணரிடம் செக் செய்து கொள்வது நல்லது.
  • சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, இந்த கருத்தடை ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்றால், சிசேரியன் செய்யும்போது இந்த ஆப்ரேஷனையும் சேர்த்தே செய்துவிடுவார்கள். இப்படிச் செய்வதினால் வேறு எந்தப் பிரச்சினையும் வராது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலம் தேறுவதற்கான காலமும் அதிகரிக்காது.

இன்ட்ரவல் ஸ்டெரிலைசேஷன்!

இந்த வகை ஆப்ரேஷன் கர்ப்பமாக இல்லாதபோது செய்யப்படும். ஆனால் பொதுவாக மாதவிடாய் வந்தவுடன் செய்தால், அந்தப் பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

கருத்தடை ஆப்ரேஷன் எப்படி செய்யப்படுகிறது?

அனஸ்தீஷியா கொடுத்துவிட்டுதான் இந்த ஆப்ரேஷன் செய்யப்படும். இது ஜெனரல் அனஸ்தீஷியா அல்லது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் அனஸ்தீஷியாவாக இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்க 2-3 நாட்களாகும். அதனால்தான் வஜைனா வழியாக குழந்தை பிறந்த பெண்களுக்கு உடனே கருத்தடை ஆப்ரேஷனைச் செய்துவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கருப்பை அப்போதும் விரிவடைந்த நிலையிலேயே தொப்புளுக்கு அருகே இருக்கும். தொப்புளுக்குக் கீழே ஒரு சிறிய 2-2.5 செ.மீ அளவு “கட்” செய்வார்கள். இந்த “கட்” வழியாக கருக்குழாயைக் கண்டுபிடித்து அவைகளை முடிபோட்டு விடுவார்கள். சிசேரியன் செய்யும்போது, அடி வயிறு ஏற்கெனவே திறந்து இருப்பதால் கருக்குழாய்களை சுலபமாக கண்டறிந்துவிடலாம்.

இரண்டு கருக்குழாய்களும் தைக்கப்பட்டு, முடிபோட்டு “கட்” செய்வார்கள். இந்த கருக்குழாய்கள் குணமானவுடன், துண்டிக்கப்பட்ட இரண்டு நுனிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இதனால் விந்தணுவால் கருமுட்டைகளை எட்டவே முடியாது. இந்த கருக்குழாய்களைத் தைத்த பின்பு இந்தச் செய்முறை கம்ப்ளீட்டாகும். தொப்புளுக்குக் கீழே வெட்டப்பட்ட தோலை மூடி, தைத்து, மேலே பஞ்சு வைத்து டிரெஸ்ஸிங் செய்துவிடுவார்கள். இந்த ஆப்ரேஷன் செய்ய 15-லிருந்து 30 நிமிடங்ககள் வரை ஆகும். இதற்குப் பிறகு ஹாஸ்பிடலில் 2-3 நாட்கள் அதிகமாக தங்க வேண்டிவரும்.

கர்ப்பமாக இல்லாத பெண்ணுக்கு அடிவயிற்றில் ஒரு சிறிய “கட்” செய்து (mini laparotomy) கருக்குழய்களை முடிபோட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் இதை லேப்ரோஸ்கோப்பி முறையால் செய்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி வழியாக செய்தால் கருக்குழாயை அடைப்பதற்கு ஃபில்லோப் ரிங் அல்லது கார்ட்ரி செய்வார்கள்.

கருத்தடை ஆப்ரேஷனுக்குப் பிறகும் கர்ப்பம்!

இந்த கருத்தடை ஆப்ரேஷனுக்குப் பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ரிஸ்க் சிறிதளவே. ஆயிரத்தில் 4-6 பெண்கள் கருத்தரிக்கலாம். இது எப்படி நிகழ்கிறது என்றால், வெட்டப்பட்ட கருக்குழாய்கள் வளர்ந்து இணைந்துவிடும். இது தன்னாலேயே ஆவதால் இந்த முறையைப் பயனற்ற முறை என்று சொல்லிவிட முடியாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Source
ImageImage

Related Articles

Back to top button