கர்ப்பிணிதாய்மைபாலியல்

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா ?

Pregnant Sex

கல்யாணம் ஆன உடன் கர்ப்பம் அடையும் பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் கர்ப்பமாக இருக்கும் பொழுது உடல் உறவு வைத்துக் கொள்ளலாமா ? என்பதுதான். இந்த விசயத்தை பெண்களை விட ஆண்கள்தான் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆண்கள் தங்கள் கைகளையும், கண்களையும் சும்மா வைத்திருப்பார்கள். பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடலுறவில் இன்பம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும்போது உடலுறவு கொள்ள வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது. அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்துவிடும்.

மேலும், உடலுறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அதற்காக கவலைப்பட வேண்டாம், உடலுறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூடுமானவரை ஆணுறைப்பயன்படுத்தி உடலுறவுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும். கர்ப்பிணின் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உடலுறவுக் கொள்ளலாம்.

8 அல்லது 9-வது மாதங்களில் உடலுறவுக்கொள்ளும் போது தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9 வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது. எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உடலுறவுகொள்ளவேண்டும்.

இத்தனை ரிஸ்க் எடுத்து கர்ப்பமான காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டுமா ? அதுவும் இன்றைக்கு குழந்தை பெற்றெடுப்பதே பெரிய விசயமாகி இருக்கும் காலகட்டத்தில் இதை எல்லாம் ஒத்தி வைத்தால் தாயும், சேயும் நலமாக இருப்பார்கள் என்பதை ஆண்கள் அறிந்து கொண்டு, பொறுமையாக இருப்பது நல்லது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button