ஆரோக்கியம்

காதுக்குள் பூச்சி நுழைந்தால் இதைச் செய்யுங்கள்

If the insect enters the ear

மழைக்காலங்களில் வீட்டுக்குள் பூச்சிகள் வருவது இயல்பான விசயம் என்றபோதும், அது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தரையில் தூங்கும் முதியவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மழை காலங்களில் இரவில் வீட்டுக்குள் வரும் பூச்சிகள் காதுகளுக்குள் சென்று விட அதிக வாய்ப்புண்டு. அப்படிச் சென்றுவிட்டால் நாம் உடனடியாக செய்ய வேண்டியவைகள் குறித்து பார்ப்போம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காதில் பூச்சி கடித்து விசம் ஏறினால் மறக்காமல் காது மருத்துவரை அணுக வேண்டியது மிக அவசியம்.

காதுக்குள் சென்ற பூச்சி முதலில் சாகடிக்க வேண்டும்… இல்லையெனில் காதுக்குள் எங்கேயாவது பயத்தில் அது கடித்து வைத்து விடும். காதில் பூச்சி புகுந்தால் உடனே தேங்காய் எண்ணெய் அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினால் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்து விடும்.

இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று. ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது, இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள்.

அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு காதுக்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும். இதில் ஏதும் சிக்கலோ அல்லது இடரோ நேரிட்டால் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகுவது நல்லது.

காது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. அதுவும் நுண்ணிய ஓட்டை கொண்ட நுழைவு என்பதால் எந்த பூச்சி, பொருள் நுழைந்தாலும் எடுப்பது மிகவும் சிரமம். அவ்வாறு நுழைந்துவிட்டால் காது வலி, காது குடைச்சல் தாங்கமுடியாத வலியாக இருக்கும். எனவே அப்படி எதிர்பாராத விதமாக ஏதேனும் நுழைந்துவிட்டால் உடனே காதுக்குள் சிலர் தண்ணீர் ஊற்றுவார்கள்.

ஆனால் பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறக்காது. எனவே காதுக்குள் ஆலிவ் எண்ணெய் , பேபி ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் காது நிரம்ப ஊற்றிவிட்டு காதை காற்று புகாதவாறு மூடி விடுங்கள். பின் பூச்சி இறந்து வெளியே வந்துவிடும்.

ஒருவேளை பூச்சி வெளியே வரவில்லை, இறந்த பூச்சியை எடுக்க முடியவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக இதுபோன்ற சமயத்தில் பட்ஸ் காதுக்குள் செலுத்துவது, கம்பி, ஊக்கு போன்ற எந்த பொருளையும் காதுக்குள் விட்டு பயன்படுத்தக் கூடாது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். கூடுதல் துன்பத்துக்கு ஆளாவீர்கள். குறிப்பாக இதுபோன்ற சமயத்தில் பட்ஸ் காதுக்குள் செலுத்துவது, கம்பி, ஊக்கு போன்ற எந்த பொருளையும் காதுக்குள் விட்டு பயன்படுத்தக் கூடாது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். கூடுதல் துன்பத்துக்கு ஆளாவீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button