ஆரோக்கியம்

காய்ச்சல, சளி, இருமல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

Fever, cold, cough

காய்ச்சல் என்று வந்து விட்டால் பதறி போய் இருக்கிற மருந்து மாத்திரைகளையெல்லாம் போட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த முனைகின்றோம். காய்ச்சல் என்பது என்ன? இதனை அவசியம் தெரிந்துக் கொள்ளுவோம். பொதுவாக கிருமிகளானது மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும், தோலில் உள்ள காயங்கள் மற்றும் வெடிப்புக்கள் வழியாகவும் சிறுநீர் பாதை வழியாகவும் உள் நுழைய பார்க்கின்றன. உடலுக்கும் ஒரு ராணுவ கட்டமைப்பு உண்டு. எதிரிகள் உள் நுழையும் பொழுது ராணுவம் எவ்வாறு தாக்குவதற்கு தயாராகிறதோ அதே போல் உடலில் கிருமிகள் நுழையும் பொழுது அவற்றை தாக்க பல பாதுகாப்பு முறைகளை கொண்டுள்ளது.

இத்தாக்குதலின் பொழுது உடலானது வெப்பமடையும். இதுவே காய்ச்சல் ஆகும். கிருமிகள் சாதாரண உக்கிர நிலையில் இருந்தால் காய்ச்சலும் கூட ஒன்று அல்லது இரண்டு நாளில் சரியாகி விடும். சில நேரங்களில் நோய்க்கிருமிகள் மிக உக்கிரமானதாக இருக்கும். அதற்கு எதிரான போரை நோய் எதிர்ப்புசக்தியின் இன்னொரு வீரியமான கட்டமைப்பு ஏற்றுக் கொண்டு போரிடும். இதன் பொழுது ஏற்படும் காய்ச்சல் ஒரு வாரம் வரை கூட இருக்கும்.

இதற்கு நாம் பரசிட்டமோல் போன்ற மருந்துகளை குடிப்பதால் அந்த கட்டமைப்பு நாளடைவில் திறனற்று போகும். இவ்வாறு எதிர்ப்பு சக்தி மண்டலம் திறனற்று போனால் எந்த நோய் கிருமிகளும் எளிதாக நம் உடலை தாக்கும் நிலை தோன்றும். ஏனெனில் தினமும் பல்லாயிரம் கிருமிகள் நம் உடலை தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. எமக்கு தெரியாமலேயே அவை நம் உடலால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சளி, இருமல் கூட கிருமிகளை வெளித்தள்ளும் ஒரு முறைமையே. சளியை மருந்துகள் குடித்து நிறுத்துவதால் நோய் கிருமிகளும் வெளி வராமல் உள்ளேயே பதுங்கி கொள்ளும் நிலை ஏற்படும்.

ஆகவே காய்ச்சல், சளி, இருமல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் உடலுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். கூடவே சரியான முறையில் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும். உடலின் வெப்பநிலை கூடாமல் இருக்க அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். அல்லது துணியை நனைத்து, பிழிந்து விட்டு அடிக்கடி முகம், கழுத்து மற்றும் உடலை துடைத்துக் கொள்ளலாம். முடிந்தால் உடலை கழுவிக் கொள்ளலாம். நன்றாக நீர் அருந்த வேண்டும். பழங்களை அடிக்கடி உண்ணல் வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணல் வேண்டும். வெளி உணவுகள், தயார் உணவுகள், பரோட்டா, பிஸ்கட், மைதா உணவுகள், பழைய உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினமும் உண்ணல் வேண்டும். பீட்ரூட் + கேரட் ஜூஸ், லெமன் கலந்த மெல்லிய சூடான நீர் அருந்துவது நல்லது. ஓமம், சோம்பு போன்றவற்றில் நோய் எதிர்ப்புசக்தியை தூண்டும் கனிமங்கள் உள்ளன.

இதனோடு பட்டை, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள், மிளகு சேர்த்து காய்ச்சி அதனை மூன்று வேளை அருந்தி வருவது மிக்க நல்லது. உணவுக்கு பின் பூண்டை சிறிதாக நறுக்கி சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட்டு, ஆறியதும் அப்படியே எடுத்து குடிக்க வேண்டும். இஞ்சியை பொடியாக நறுக்கி சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது மிக நல்லது. ஓய்வும், சீரான தூக்கமும் மிக அவசியம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button