பாலியல்பிரசவம்

சிசேரியனுக்குப் பிறகு எப்போது செக்ஸ் வைக்கலாம் ?

Is sex a problem after a cesarean?

வலியில்லாமல் குழந்தை பெற வேண்டும் என நினைக்கும் பெண்களின் முடிவாக இருப்பது சிசேரியன். மேலும் சிலர் தானாக பிறகும் குழந்தையை, ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம் எனும் பெயரில் சிசேரியன் செய்து, குழந்தையை எடுத்துவிடுகிறார்கள். என்னதான் அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும், இவர்களிடம் இதில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லை. சில ஆபத்தான நேரங்களில், சிசேரியனை ஏற்று கொள்வதில் தவறில்லை. இதில் எந்த காரணத்திற்காக சிசேரியன் செய்து கொண்டாலும், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய விசயங்களப்  பார்ப்போம்.

சிசேரியன் செய்த பெண்கள் கவனிக்க வேண்டியவை:

சிசேரியன் செய்வது சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான். சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களோ சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள்.

இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும். சிசேரியன் ஆன பெண்கள், புரேபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரேபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க கூடாது. நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் இருக்க உதவும்.

பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்கçe தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும். சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே முடிந்தவரை சிசேரியனை தவிர்க்க முயற்சியுங்கள். முடியாத சமயத்தில், இவற்றை பின்பற்றுங்கள். உடல்நலனை மேம்படுத்த, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது ?

முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன், சுகப் பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன் என இரண்டு வகைப்படும். கருவுற்று 38வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தையை வெளியே எடுப்பது சுகப் பிரசவம். இதற்கு, பெல்விஸ், பேசேஜ், பவர், பாசஞ்சர் எனும் நான்கு முக்கியம். பெல்விஸ் என்பது இடுப்புக் குருத்தெலும்புப் பகுதி. “பாசேஜ் என்பது கர்ப்பப்பையில் இருந்து செர்விக்ஸ், வெஜைனா வழியாகக் குழந்தை பயணிக்கும் பாதை. “பவர் என்பது பிரசவத்தின்போது கர்ப்பப்பையில் இயற்கையாக உருவாகும் அழுத்தம். குழந்தையை “பாசஞ்சர் (பயணி) என்கிறோம்.

உயரம் குறைந்த பெண்களின் இடுப்பு எலும்பின் சுற்றளவு சிறிதாக இருக்கும். இது, செபலோபெல்விக் டிஸ்புரோபோர்­ன் (Cephalopelvic disproportion (CPD) எனப்படும். உடலுறவின்போது விந்து கர்ப்பப்பைக்குள் செல்ல அனுமதிக்கும் பாதை, செர்விக்ஸ். விரிந்து சுருங்கும் தன்மை உடைய இதன் சராசரி குறுக்கு அளவு இரண்டு முதல் மூன்று செ.மீ. கரு உருவான உடன் இது இறுக மூடிக்கொள்ளும். பிறகு, பிரசவத்தின்போது குழந்தை இதன் மூலமாகவே வெளியே வரும். முதல் சுகப்பிரசவத்துக்குப் பிறகு இதன் சுருங்கி விரியும் தன்மை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.

நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால், வெளியேற முடிவது இல்லை. குழந்தையின் மிருதுவான மண்டைஓடு வெளியே வரும் முயற்சியில் ஒன்றன் மேல் ஒன்று நகர்ந்து அழுத்தப்பட்டு தலையின் அளவு குறையும். இதனால் 37 வாரங்கள் முடிவதற்குள் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதைத் தவிர்க்க, சிசேரியன் செய்யப்படுகிறது.

பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வர முற்சிக்கும்போது, தாயின் சிறுநீர்ப்பையை குழந்தையின் தலை அழுத்த நேரிடும். திரும்பத் திரும்ப அழுத்தும்போது, சிறுநீர்ப்பை அழுகிவிட வாய்ப்பு உள்ளது. இது, “பிஸ்டுலா எனப்படுகிறது. இதைத் தவிர்க்க சிசேரியன் பயன்படும். கர்ப்பப்பையில் உள்ள நீரில் மிதக்கும் சிசுவானது கை, கால்களைக் குறுக்கிக்கொண்டு மடங்கி இருக்கும். இந்த நிலையில் இல்லாமல் குழந்தையின் எலும்பு, உடல் தசை வளர்ச்சி அதிகமாக இருந்தால் குழந்தை செர்விக்ஸ் வழியாக வெளியேறுவது கடினம்.

சிசேரியனுக்குப் பிறகு செக்ஸ்

சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எல்லா தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆனால், இதைச் செய்யாததால், சிசேரியன் ஆன நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிளசன்டா ப்ரெவியா போன்ற அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு

ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாயம் ஃபோலிக் அமில மாத்திரையை, கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைபாடுகளைத் தவிர்க்கும். இந்த மாத்திரை எல்லா ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Source
ImageImage

Related Articles

Back to top button