ஆரோக்கியம்

தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

The main causes of headaches

தலைவலி மற்றும் உடலில் ஏற்படும் வலியெல்லாம் நோயல்ல. அது ஒரு அலாரம். அதாவது நமது உடலின் பிழையான போக்கை உங்களுக்கு உணர்த்தும் அறிகுறி. ஆகவே அறிகுறிக்கு மருந்து எடுக்காதீர்கள். ஒரு பலனும் கிடைக்காது. அந்த மருந்துகளால் நரம்புமண்டலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உடலில் இரத்த ஓட்டம் குறைதல், இரவு தூக்கம் குறைதல், நேரம் பிந்தி எழுதல், உடலில் நீர் தன்மை குறைதல், அதீத எலக்ட்ரோனிக் பாவனை, காலை உணவை தவிர்த்தல், மன அழுத்தம், மலச்சிக்கல், உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைதல் போன்ற பல காரணங்கள் தலைவலியையும், உடல் வலியையும் உண்டாகும்.

நம் வாழ்வை ஒழுங்கு படுத்தினால் மட்டுமே உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினையையும் வேரோடு களையலாம். ஏனெனில் நோயின் மூலக்கூறு ஒன்று தான். நோய்கள் தான் பல. ஆகவே மாத்திரைகளை உண்டு வலியை அலட்சியப்படுத்துதல் கூடாது. அளவோடு உண்ணுங்கள். உங்கள் உள்ளங்கையின் அளவே உங்கள் அளவு. அதில் பாதிக்கு காய்கறிகள் இருக்க வேண்டும். பசிக்காமல் என்றும் உண்ணாதீர்கள்.

இரவு உணவை எட்டு மணிக்கு முன் உண்ணுங்கள். மைதா, கடை உணவுகளை, பால் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளாக உண்ணுங்கள். இரவில் நேரத்துக்கு உறங்குங்கள். அதிகாலையில் எழும்புங்கள். அவசியம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்யுங்கள். முழுநாளும் சோபாவில் முடங்காமல் சுறுசுறுப்பாக இருங்கள். ஓமம், சீரகம் போட்டு காய்ச்சிய நீரை தினமும் அருந்துவது மிக நல்லது. போதுமான அளவு நீர் அருந்துங்கள்.

பழங்களை தனி உணவாக வெறும் வயிற்றில் உண்ணுங்கள். தினமும் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளை உண்ணுதல் மிக்க நலம் தரும். கேடான தூள் உப்பு, வெள்ளை சீனி, தாவர எண்ணெய்களை அறவே தவிருங்கள். ஆரோக்கியம் என்றும் நம் கையில் தான் உள்ளது. தொலைத்து விடக் கூடாது. பின் தேடுவதில் நம் வாழ்வு தொலைந்து விடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button