தாய்ப்பால்தாய்மை

தாய்ப்பாலை கறந்து சேமித்துக் கொடுப்பது எப்படி ?

How to save breast milk

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்து தங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். பழயை முறைப்படி சுயமாகவே கைகளால் கறந்து பாலை சேமித்துவைத்துக் கொள்ளலாம். இது கடினம் எனும் பெண்கள் பிரெஸ்ட் பம்ப் எனும் கருவியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து விரிவாக வேறு ஒரு பதிவில் காண்போம். இப்பொழுது தாய்ப்பாலை எப்படிச் சேமிப்பது குறித்தும், சேமித்தப் பாலை எத்தனை நாட்கள் வரை கொடுக்கலாம் என்பது குறித்தும் பார்ப்போம்.

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். பாத்திரத்தில் பீய்ச்சி எடுப்பதற்கு முன்னதாக மார்பகங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கறந்த பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில்  24 முதல் 48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி குழந்தைக்குக் கொடுக்கலாம்.  இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம்.  இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.  ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். 10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது. ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.

ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் கவனத்திற்கு

தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

பாலூட்டும் தாயின்  உணவுமுறை

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது… இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள்.

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிக்கப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் குழந்தைக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

கேள்வி பதில்கள்

தாய்ப்பாலை எவ்வாறு கறந்து சேமிக்க முடியும்?

ஒரு தாயால் குழந்தைக்கு நேரடியாகப் பாலூட்ட முடியாவிட்டால், கை, கைப்பம்பு அல்லது மின் மார்புப் பம்பால் கறந்து உடனடியாகக் குளிர்பதனத்தில் 3-8 நாட்கள் வரை பாதுகாக்க முடியும். பயன் படுத்துவதற்கு முன் சூடான குழாய்த் தண்ணீரால் சூடாக்க வேண்டும். மைக்ரோவேவை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

தாய்ப்பாலூட்டுவது பற்றிய பொதுவான கட்டுக் கதைகள் என்ன?

  • அடிக்கடி பாலூட்டினால் பால் சரியாக ஊறாது
  • கடம்பு குழந்தைக்கு ஆகாது.
  • பாலூட்டும்போது 5-10 நிமிடத்திலேயே குழந்தை தனக்குத் தேவையான பாலைப் பெற்றுக் கொள்ளுகிறது..
  • பாலூட்டும் தாய் மீண்டும் பால் ஊறுவதற்காக இடைவெளி கொடுத்தே பாலூட்ட வேண்டும்.

இவை புறந்தள்ள வேண்டிய அடிப்படையற்ற தவறான கருத்துக்களே.

பால்மறக்கச் செய்தல் என்றால் என்ன?

படிப்படியாகத் தாய்ப்பாலோடு கூடுதலாக உணவையும் நீராகாரங்களையும் அளித்தல். பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின் இது தொடங்கப்படும்.

பாலூட்டும் தாய் புகைப்பது, குடிப்பது அல்லது மருந்துகளை உட்கொள்ளுவது பாதுகாப்பானதா?

பாலூட்டும் தாய் எப்போதும் மதுவையும் புகையிலையையும் தவிர்க்க வேண்டும். சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக எளிதில் சென்று குழந்தைக்குத் தீங்கிழைக்க்க் கூடுமாதலால் தாய் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே மருந்து உட்கொள்ள வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button