தாய்ப்பால்தாய்மை

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் சித்த மருத்துவ முறைகள்

Paranoid medical methods that increase the secretion of breast milk

அன்றைக்கு பத்து பபிள்ளைகளுக்கும் மேல் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் வற்றவே வற்றாது. ஆனால் இன்றைக்கு ஒரு பிள்ளைக்கு கொடுக்க கூட தாய்ப்பால் இல்லவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைகள் முழுமையாக மாறிவிட்டது. அப்படி பால் இல்லாத இளம் தாய்மார்கள் பெரும்பாலானோர் இன்றைக்கு செய்வதெல்லாம் ஒன்றுதான். மருத்துவர்களின் பரிந்துரைப்படி பால் சுரக்கும் மாத்திரைகளை போட்டுக் கொள்கின்றனர். அல்லது பால்பாக்கெட், பால் பவுடர் என மாறிவிடுகின்றனர். இந்த இரண்டுமே தாய்க்கும், குழந்தைக்கும் நல்லதல்ல. அதிலும் பால் சுரக்க மாத்திரை போடுவது என்பது பின்னாளில் நிச்சயமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும். சரி இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்கும் பெண்களுக்கு இயற்கையான சித்த மருத்துவ முறையில் அதிக பால் சுரப்பை பெறலாம். கீழே ஏரளானமான சித்த மருத்துவ முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு எது எளிமையாக கிடைக்குமோ அதை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தினால் மார்பு நிறைய தாய்ப்பால் சுரக்கும். குழந்தையின் வயிறும் நிறையும். பக்கவிளைவுகள் ஏதும் இல்லை.

வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும். வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும். சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். தேன், அமுக்கராங்கிழங்கின் ரசம், மிளகுரசம், மணத்தக்காளி ரசம் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தூய்மையடையும்.

பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும். நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். கோரை செடியின் கிழங்கை பச்சையாக எடுத்து நன்றாக அரைத்து சிறிது எடுத்து மார்பில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். ஒரு கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து இரண்டு முறை பாலுடன் சேர்த்து குடித்தால் தாய்பால்அதிகரிக்கும். ஆமணக்கு இலையை நெய் தடவி நெருப்பில் வாட்டி லேசான சூட்டில் மார்பகத்தில் வைத்து கட்டி கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் தொடர்ந்து பற்றுப் போட்டு வந்தால் தாய்பால் அதிகமாக சுரக்கும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் சேர்த்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அகத்தி இலையைச் சமைத்து உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். துளசி, அதிமதுரம் ஆகியவற்றை வெந்நீர் சேர்த்து சந்தனம்போல் அரைத்து தாயின் மார்பகத்தில் தடவினால் குழந்தைகள் பால் நன்றாக அருந்தும்

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button