ஆரோக்கியம்

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது தெரியுமா ?

Do you know how diabetes occurs?

கொழுப்பு என்பது எரிபொருள். அதாவது நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு சக்தி தர கொழுப்பு மிக அவசியம். ஆனால் உண்ணும் அளவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாது போனால் கொழுப்பு எரிக்கப்படாது அப்படியே உடலில் சேமிக்கப்பட்டு வீடும். இதுவே சர்க்கரை நோயாக மாறும். கொழுப்புக்களை எரிக்க உடல் உழைப்பு மிக அவசியம். ஆகவே நடைப்பயிற்சி, யோகா போன்றவை தினமும் இருமுறை செய்வது சாலச் சிறந்தது இறைச்சி, கொழுப்பு உணவுகள் மட்டுமல்ல மாவு உணவுகளும், இனிப்பு உணவுகளும் கூட கொழுப்பாக தான் படியும்.

வெள்ளை அரிசி, மைதா உணவுகள், பால் உணவுகள் போன்றவை சர்க்கரை நோயின் ஊக்கிகள்.
நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது சர்க்கரை நோயை ஊக்குவிக்கும். உடல் சோர்ந்தால் கொழுப்பு உடலில் படியும். ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். இரவில் நேரத்துக்கு உறங்காமல் இருப்பதுவும் சர்க்கரை நோயை ஊக்குவிக்கும். இன்று நாம் உணவு கட்டுப்பாடுகளை செய்து இன்றே சர்க்கரை நோய் மாறி விடாது.

ஏனெனில் உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புக்கள் தினம் தினம் உடலில் சீனியின் அளவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதனை முதலில் கரைக்க வேண்டும்.
இதனால் தான் இரவில் உணவை குறைத்து உணடாலும் கூட காலையில் சீனியின் அளவு உடலில் கூடி காணப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு சர்க்கரை அளவு குறையவில்லை என்று அதற்கு மருந்து உண்டு சிறுநீரகத்துக்கு பெரும் தீமையை செய்கிறோம். என்று உடலில் உள்ள கொழுப்பு முற்றாக தீர்கிறதோ அன்று தான் சர்க்கரை நோய் இல்லாது உடல் நலம் பெறும்.

இதற்கு மேல் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது இரவில் நாம் நேரம் பிந்தி உணவுகள் கூட சக்தியாக மாற்றப்படாது கொழுப்பாகத் தான் படியும். சர்க்கரையை நோயை விரட்டுவது என்பது நம் உழைப்பையும், முயற்சியையும் பொறுத்தது. உடலில் இது நாள் வரை சேர்ந்து விட்ட கொழுப்பை கரைப்பதுவும், இனி புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க உணவுகளை கட்டுப்படுத்துவதும் நம் கையில் தான் இருக்கிறது. இரண்டும் சரி வர கையாளப்பட்டால் 6 மாதத்தில் கூட நோய் குணமாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button