தாய்மைபிரசவம்

பிரசவத்திற்கு பின் பழைய உடலை பெற செய்ய வேண்டியவைகள்

After pregnancy Body

ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு பிறகு உச்சி முதல் பாதம் வரை ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பு. முதலில் உடல் குண்டாகும். அதுவே பல பெண்களுக்கு பெரும் கவலையாக உருவெடுக்கும். யாராவது பருத்துட்டீயே மா என்று சொன்னால்போதும். கவலை உடல் முழுவதும் தொற்றிக் கொள்ளும். அடுத்ததாக சருமத்தில் கரும்புள்ளிகளும், சிவப்பு புள்ளிகளும் ஆங்காங்கே தோன்றும். முக்கியமாக வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படும்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம், பத்து மாதங்கள் உடலுக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்கள் மட்டுமே. மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு சகஜ நிலையை அடைந்ததும் சருமத்திலும், கூந்தலிலும் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும். வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அந்தத் தற்காலிக மாற்றங்கள் கவலையளிக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் சீக்கிரமே பழைய அழகுக்குத் திரும்பலாம்.பழைய நிலைக்கு மீண்டும் மாற பெண்கள் இதை கடைபிடியுங்கள். கஷ்டமான ஒன்று என்றபோதும், கடைபிடித்தால் உங்கள் இஷ்டமான உடல் கிடைக்கும். சரி அது என்னவென்று பார்ப்போம்.

காலை முகம் கழுவியதும் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து கழுவ வேண்டும். சருமத்தில் லேசான ஈரப்பதம் இருக்கும்போதே மாய்ஸ்சரைசர் தடவவும். மதியம் உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இரவில் நான்கு பாதாம் பருப்புகளை ஊறவைத்து நன்றாக அரைத்து அத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும்.

முக்கியமாக பிரசவத்துக்குப் பின் ஏற்படும் துத்தநாகக் குறைபாட்டினால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். துத்தநாகச் சத்து நிறைந்த கோழி, முட்டை, முழு தானியங்கள், பாதாம், தயிர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும். காபி, டீ தவிர்த்து கேரட் ஜூஸ், கொழுப்பு நீக்கிய பால் குடிக்கவும். தினமும் மதிய உணவில் ஒரு கீரை சேர்த்துக் கொள்ளவும். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கவும்.

குழந்தை தூங்கும்போது:
இதையும் தாண்டி குழந்தை தூங்கும்போது சிலவற்றை கடைபிடிக்கலாம். அவை; ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து கைகால் களுக்குத் தடவிக்கொண்டு குட்டித் தூக்கம் போடவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இந்த சிகிச்சை கைகால்களின் சருமத்தில் ஏற்பட்ட நிற மாற்றத்தை நீக்கி, மென்மையாக வைக்கும். இரண்டு டீஸ்பூன் ஓட்ஸுடன் பாதி தக்காளி சேர்த்து அரைத்து, கழுத்துப் பகுதியில் கருமை படர்ந்த இடத்தில் தடவினால் மாற்றம் தெரியும்.

முடி உதிர்வுக்கு தீர்வு:
ஒரு கப் தேங்காய் எண்ணெயில் இரண்டு பல் பூண்டு, இரண்டு சாம்பார் வெங்காயம், கால் டீஸ்பூன் வெந்தயம் இந்த மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தலைக்குக் குளிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் இந்த எண்ணெயை லேசாகச் சூடு செய்து தலையில் தடவி மசாஜ் செய்து கெமிக்கல் இல்லாத ஷாம்பூ உபயோகித்து அலசவும்.

பிரசவத் தழும்பு:
எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன், வைட்டமின் ஈ எண்ணெய் அரை டீஸ்பூன், கற்றாழை ஜெல் அரை டீஸ்பூன். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். தினமும் இரவில் தழும்புகளின் மேல் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து காலையில் கழுவ வேண்டும்.

உணவு:
முக்கியமாக உணவு விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பிறகு எண்ணெய்யில் செய்த உணவுப் பொருட்களை அதிகமாக உண்ணக் கூடாது. நொறுக்குத் தீனிக்கு குட்பை சொல்வது நல்லது. அவித்த காய்கறி சூப், பழங்கள், ஜூஸ், கீரைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவை பொருத்தவரையில் மீன் பொறிக்காமல் குழம்பாக சமைத்து சாப்பிடலாம்.

இவைகளை செய்தால்போதும், பிரசவத்திற்கு பின் உங்கள் உடல், சருமம், கூந்தழ் என அனைத்தும் பழைய நிலைக்கே வந்துவிடும். அதாவது குழந்தைக்கு அம்மா வா நீங்கள் என்று அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு மாறிவிடுவீர்கள். அப்படி மாறினால் உங்களை விட உங்கள் கணவர் மிகுந்த சந்தோசமும், காதலும் செய்வது நிச்சயம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Related Articles

Back to top button