ஆரோக்கியம்

மஞ்சள் காமாலை நோய்க்கு செய்யக் கூடாதவைகள்

Jaundice

நம் மக்கள் இடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அதாவது மஞ்சள் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் வரும் என்று. ஆனால் மஞ்சளுக்கும், மஞ்சள் காமாலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. கல்லீரல் மற்றும் பித்தப்பை பாதிப்புக்கள் காரணமாகவே மஞ்சள் காமாலை நோய் வருகிறது. அதாவது கல்லீரல் செயல்திறனற்று போவதாலும், கல்லீரலில் இருந்து பித்தப்பை ஊடாக பித்தம் வெளியேற்றம் சரிவர நடைபெறாத போதும் உடலில் பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் தோன்றும். பொதுவாக கல்லீரலில் 75% விகிதம் பாதிப்புக்கள் வரும் வரை எதுவும் வெளி தெரியாது. அது தன்னை தானே சீர் செய்து கொள்ளும் தன்மை கொண்டது.

கல்லீரலின் கண்ணாடி கண்கள். அங்கு என்ன பாதிப்புக்கள் வந்தாலும் கண்கள் காட்டி கொடுத்து விடும். கண்களும், தோலும் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் மஞ்சள் காமாலை நோய் உடலில் தோன்றி விட்டதாக அறிந்துக் கொள்ளலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணும் உணவுகள், ஆரோக்கியமற்ற கடை உணவுகள், மைதா உணவுகள், பேக்கரி உணவுகள், குளிர்பானங்கள், மது பாவனை, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் பித்தப்பை மற்றும் கல்லீரலின் செயல் திறன் பாதிக்கப்பட்டு, பித்தம் வெளியேற்றம் நடக்காமல் உடலில் தேங்கும் நிலை ஏற்படும்.

உடல் சூடு கூடும் பொழுதும், இரவு உறக்கம் இல்லாமல் விழித்திருக்கும் பொழுதும் வயிற்றில் புளிப்பு அமிலங்கள் தோன்றி பித்தமாக மாறி விடும். நம் தவறுகள் தான் எல்லா நோய்களினதும் வேர். இதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? சூரிய வெளிச்சம் படுமாறு நடை பயிற்சி, யோகா செய்யுங்கள். சோபாக்களில் நீண்ட நேரம் உட்காரும் பழக்கம் இருந்தால் தயவு செய்து உட்காராதீர்கள். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

இரவில் நேரத்துக்கு உறங்கி அதிகாலையில் எழும்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பழைய உணவுகளை சூடு படுத்தி உண்ணல் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட புளித்த தயிர் மற்றும் புளித்த இட்லி மா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நார் சத்து உள்ள தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி, காய் கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்களை வெறும் வயிற்றில் ஒரு சிறு உணவாக உண்ணல் வேண்டும். அதனோடு வேறு எந்த உணவையும் உண்ண வேண்டாம்.

தினமும் ஓமம், சோம்பு, ஏலம், கிராம்பு, மஞ்சள், மிளகு போன்றவற்றை காய்ச்சிய நீரை இரு வேளை குடியுங்கள். இது உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதோடு கிருமி தொற்றுக்களையும் தடுக்கும். மைதா மா, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, பால் உணவுகள், தாவர எண்ணெய்கள், தூள் உப்பு, பதப்படுத்திய உணவுகள் போன்றவற்றை உங்கள் உணவில் இருந்து அறவே ஒதுக்குங்கள். பரோட்டா, பிஸ்கட் உட்பட கடை உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button