தாய்மைமாதவிடாய்

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் அறிந்து கொள்ளுங்கள்

Periods - menstruation

ப்ரீ மென்ஸ்ட்ரல் சின்ரோம் என்பது மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ பெண்களுக்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ தோன்றக்கூடிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் என்பது, மனசோர்வு, சோகம், பதற்றம், எரிச்சல், அமைதியின்மை, அதிகமான பசி, தலைவலி, முகப்பரு போன்றவையாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் மாதவிடாய் காலத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் மற்றும் மாதவிடாய் காலத்தின் முதல் சில நாட்களுக்குப் பிறகு அவை குறைந்திடும். அந்த அறிகுறிகள் எந்தவொரு உள்ளுறுப்பின் காயங்களாலோ ஏற்பட கூடியவையோ அல்லது தொடர்புடையவையோ அல்ல. மாதவிடாய் சுழற்சியினால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் விளைவே இவை. மேலும் இவை பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் தொந்தரவாகவே ஒவ்வொரு முறையும் அமையக்கூடும். யோகா, மன அழுத்த மேலாண்மை, தியானம் மற்றும் உணவு கையாளுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவற்றில் இருந்து விடுபட உதவக்கூடும்.

குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின் 2 வது பாதியில் காப்ஃபைன், உப்பு, ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பதே சிறந்தது. ஏராளமான பெண்கள் மாதவிடாய் காலங்களில் கடும் வயிற்று வலியை உணரக்கூடும். இது முதல் 2 நாட்களிலேயே அதிகமாக இருக்கும். இதற்கு சூடு நீர் ஒத்தடம் அல்லது இப்யூபுரூஃபன், மெஃபெனாமிக் அமிலம் சிறந்த நிவாரணமாக அமையக்கூடும்.

மாதவிடாய் ஏற்பட்ட பிறகு மாதவிடாய் காலண்டரை பராமரிக்கவும். உங்களது வழக்கமான மாதவிடாய் சுழற்சியை தெரிந்து கொள்ள இது மிகவும் உதவும். ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்கிய நாள், முடிந்த நாள், இரத்த போக்கின் அளவு, உபயோகித்த நாப்கின்கள் அளவு, கணிசமான இரத்தபோக்கு இருந்ததா, இடைக்கால இரத்த போக்கு எதுவும் இருந்ததா போன்றவற்றை அதில் குறித்து வைத்து கொள்ளவும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button