தாய்மைமாதவிடாய்

முதன் முறையாய் மாதவிடாய் வரும்போது எப்படி இருக்கும் ?

first time menstruation

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். சரியாக 11 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பூப்பெய்தி விடுவர் அல்லது பெண்ணின் மார்பக வளர்ச்சி தொடங்கிய 2 வருடத்திற்குள் பூப்பெய்தி விடுவர்.

11 அல்லது 15 வயதில் தொடங்கும் இந்த மாதவிடாயானது, 45 முதல் 55 வயதிற்குள் பொதுவாக நின்றுவிடும். கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டும் காலங்களில் மட்டும் மாதவிடாய் ஏற்படாது. பருவமடைந்த பெண்களுக்கு 21-35 நாட்கள், சரியாக கூற வேண்டுமென்றால், 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் நிகழும். 4 முதல் 5 நாட்களுக்கு இரத்த போக்கு இருக்கும். வெளியேறும் இரத்தத்தின் அளவு 20 முதல் 80 மி.லி. வரை இருக்கும்.

கருப்பையில் இருந்து வெளியேற்றப்படும் ஹார்மோனோசோஸ்டிரஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகியவற்றால் மாதவிடாயானது கட்டுப்படுத்தப்படுகிறது. பெண்களை பொறுத்தவரை, 8 வயது முதல் 18 வயது வரையிலான காலக்கட்டத்தில் தான், உடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் நிகழும். இது உடலை பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடியதற்கு ஏற்றதாக மாற்றுகிறது. இது தான் பருவமடைதல் என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் என்பது சாதாரண ஆரோக்கியமான பெண்ணாக வளருவதை வெளிகாட்டுவதற்கு நம் உடல் உணர்த்தும் ஒரு செயலாகும்.

ஒரு பெண் பூப்பெய்திய காலத்தில் இருந்து 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மாதவிடாய் என்பது தொடர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் 4 முதல் 6 வார இடைவெளிக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட தொடங்கும். நம் முன்னோர்கள் மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த நவீன காலக்கட்டத்தில் அதற்கு பல்வேறு வகையான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. நாப்கின், டேம்பான், மென்ஸ்ட்ரல் கப் என பல வகை உள்ளன. இவற்றில் எது உங்களுக்கு உகந்தது எது என்பதை பயன்படுத்திதான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காட்டனால் செய்யப்பட்ட நாப்கின்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பல்வேறு விதமான அளவுகளிலும், வடிவங்களிலும் அவை கிடைப்பதே இதற்கு காரணம். உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்ளும் வகைகளில் இவை வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் சிலர் மென்ஸ்ட்ரல் கப்புகளைப் பயன்படுத்துகின்றனர். சிலிகானால் செய்யப்பட்ட இந்த சிறிய கப்களை, பெண்ணுறுப்புக்குள் பொருத்தினால், வெளியாகும் இரத்தம் கப்பில் சேகரிக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பெண் கண்டிப்பாக மாதவிடாய் காலத்தில், நாளொன்றிற்கு 3 முதல் 5 நாப்கின்களை மாற்ற வேண்டும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Back to top button