பாலியல்

வயகராவை மிஞ்சும் தர்பூசணி பானம்; அதிக நேரம் தாம்பத்தியம் உறுதி

Sex Watermelon

தாம்பத்திய வாழ்க்கை இனிக்க வேண்டும் என்றால், கணவன் மனைவி இடையே தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்க வேண்டும். இது என்ன பெரிய விசயமா ? எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்றபோதும், தாம்பத்தியத்தில் அதிக சிக்கல் இருப்பது ஆண்களுக்கே. பெண்கள் இந்த விசயத்தில் யோகக்காரர்கள். ஆண்களுக்கு தங்களது உறுப்பு போதிய விறைப்பு அடைந்தால் மட்டுமே மனைவிக்கு இன்பமான தாம்பத்திய உறவினை அளிக்க முடியும். இல்லை என்றால் அதற்கு கட்டாயம் வயாகராத்தான் வாங்க வேண்டும். ஆனால் வயகராவை மிஞ்சும் பாலியல் பானம் ஒன்று உள்ளது. அதுதான் தர்பூசணி பானம்.

தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கிறது என்கிறார்கள் அந்த காலத்து மூலிகை மருத்துவர்கள். இதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதில்தான் விசயமே இருக்கின்றது. முறைப்படி பானமாக சாப்பிட்டால் காமமும், காதலும் களத்தில் களைகட்டுமாம். சரி இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

இதை தயாரிக்க பல பொருட்கள் எல்லாம் தேவையில்லை. ஒரு தர்பூசணி, மூன்று எலுமிச்சை இருந்தால்போதும். முதலில் தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும். பின் அதை நன்கு அரைத்து 1 லிட்டர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட்டால் போதும். இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

இதனை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வைத்து மட்டுமே பருக வேண்டும். அதாவது வாரம் ஒரு முறை செய்து வைத்து சாப்பிட்டலாம். மாதக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. பலன் கிடைக்காது. எந்த வயது ஆண்களும் இதைப் பருகலாம். இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது. செலவில்லாத, பக்கவிளைவுகள் ஏதுமில்லாத இந்த தர்பூசணி வயகரா பானத்தை அருந்துங்கள். அந்த விசயத்தில் ஆண்களே அசத்துங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Back to top button